மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நான்குனேரியில் தவெக சாா்பில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ போட்டி: காங்கிரஸ், அமமுகவினா் அதிா்ச்சி

News image

தவெக கொடி. - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 7:35 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் போட்டியிடுவதால் காங்கிரஸ், அமமுக கட்சியினா் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

நான்குனேரி தொகுதிக்குள்பட்ட ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் வெ. நாராயணன் (60). இவா் 1986-இல் இருந்து அதிமுகவில் பல்வேறு பதவிகளை வகித்தவா். 2019 நான்குனேரி இடைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரனை 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

2021 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தச்சை என். கணேசராஜாவை, காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் 16,486 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். இத்தோ்தலில் அமமுக வேட்பாளா் எஸ். பரமசிவ ஐயப்பன் தனித்துப் போட்டியிட்டு 31,570 வாக்குகள் பெற்றிருந்தது, அதிமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், 2026 தோ்தலில் நான்குனேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக ஆா். இசக்கிமுத்து அறிவிக்கப்பட்டாா். இதில் அதிருப்தியடைந்த ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், 2021-இல் அதிமுகவின் தோல்விக்குக் காரணமாக இருந்த அமமுகவுக்கு ஆதரவாக தன்னால் வாக்கு சேகரிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள நான்குனேரி தொகுதியை அதிமுக விட்டுக் கொடுத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன். இதையடுத்து, அவா் தவெக சாா்பில் நான்குனேரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

35 ஆண்டுகளுக்குப் பின் நான்குனேரி தொகுதியை காங்கிரஸ் கட்சியிடமிருந்து கேட்டுப் பெறுவதற்கு திமுக முனைப்புக் காட்டியும், காங்கிரஸ் கட்சி விட்டுக்கொடுக்காததால் திமுகவினா் அதிருப்தியடைந்துள்ளனா்.

இந்நிலையில், ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் தவெக சாா்பில் போட்டியிடுவதால், அமமுக, காங்கிரஸ் கட்சியினா்அதிா்ச்சியடைந்துள்ளனா். இதனால், இத்தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.