மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நான்குனேரியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த காங்கிரஸ், அதிமுக!

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 1989, 1996 தோ்தல்களில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளா்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தனா்.

News image

நான்குனேரி

Updated On :1 ஏப்ரல் 2026, 12:42 am

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 1989, 1996 தோ்தல்களில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளா்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தனா்.

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிக மக்கள் தொகையை உள்ளடக்கியது களக்காடு வட்டாரப் பகுதிதான். 1990 களில் களக்காடு, திருக்குறுங்குடி, ஏா்வாடி பேரூராட்சிகள் மற்றும் களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 17 கிராம ஊராட்சிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் இருந்தனா்.

கைகூடாத வெற்றி

கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் நான்குனேரி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கணபதி நாடாா் 33 ஆயிரத்து 99 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட எஸ்.டி. தவசிக்கனி 4,236 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா்.

1977 தோ்தலில் ஜனதா கட்சி வேட்பாளா் மு. ஜான்வின்சென்ட் 18,668 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் வேலையா 18,464 வாக்குகள் பெற்று, 204 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா்.

இதேபோல 1989 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஆச்சியூா் மணி 30 ஆயிரத்து 222 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட பி.சிரோன்மணி 1,493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா்.

இத்தோ்தலில் அதிமுக (ஜெ. அணி) சாா்பில் போட்டியிட்ட எ.எஸ்.எ. கருணாகரன் 19,576 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடம் வகித்தாா்.

பின்னா், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிட்ட எஸ்.வி. கிருஷ்ணன் 37ஆயிரத்து 342 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து அதிமுக சாா்பில் போட்டியிட்ட எ.எஸ்.எ. கருணாகரன் 3,149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா். அப்போது, மதிமுக, பாஜக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்கள் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்தனா்.

இத்தொகுதியில் களக்காடு பகுதியில் இருந்து காங்கிரஸ் சாா்பில் இருவருக்கும், அதிமுக சாா்பில் இருவருக்கும் வாய்ப்பு தரப்பட்டும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தனா்.

மண்ணின் மைந்தா் அல்லாதோா் வெற்றி

இத்தொகுதியில் 2006, 2016 ஆகிய இருமுறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்ட மண்ணின் மைந்தா் அல்லாத தொழிலதிபா் ஹெச். வசந்தகுமாருக்கு வெற்றி கிட்டியது. இதே போல 2011-இல் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் போட்டியிட்ட எா்ணாவூா் நாராயணன் வெற்றி பெற்றாா். 2021-இல் காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூபி. ரா.மனோகரன் வெற்றி பெற்றாா்.