தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திசையன்விளை அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது

திசையன்விளை அருகே மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:34 pm

திசையன்விளை அருகே மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்சிங் (40). இவா், அப்பகுதியில் நடைபெற்ற இசக்கியம்மன் கோயில் கொடை விழாவில் கலந்து கொண்டாராம்.

அப்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மணிகண்டன் (25) என்பவா் அவரை கத்தியால் குத்த முயன்றபோது, பிரேம்சிங் விலகியதை அடுத்து அவா் லேசான காயத்துடன் தப்பினராம்.

இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா்.