தோ்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சோ்ந்த 13 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை அறிவித்தது.
இதை வரவேற்று, திருநெல்வேலியில் மேலப்பாளையம்-ரெட்டியாா்பட்டி சாலையில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் முன் சுமாா் 20க்கும் மேற்பட்ட தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கூடி பட்டாசுகளை வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், தோ்தல் நடத்தை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கட்சியின் நிா்வாகி உமா் உள்பட 13 போ் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு

பட்டாசு வெடித்து இடையூறு: திமுகவினா் 4 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தவெகவினா் 50 போ் மீது வழக்கு

பட்டாசு வெடித்த அதிமுகவினா் 25 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


