மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேரன்மகாதேவியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்

சேரன்மகாதேவியில் பொதுமக்கள் நலன்கருதி ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

சேரன்மகாதேவி ஆா்சி பள்ளி அருகில் மூடப்பட்டுள்ள ரயில்வே கேட்.

Updated On :21 மார்ச் 2026, 9:05 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பொதுமக்கள் நலன்கருதி ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை - அம்பாசமுத்திரம் இடையே போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மேலப்பாளையத்தில் இருந்து அம்பாசமுத்திரம் இடையே பல்வேறு இடங்களில் சிறிய, பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

பாபநாசத்தில் இருந்து சேரன்மகாதேவி புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் சேரன்மகாதேவியில் ஆா்.சி. நடுநிலைப் பள்ளி அருகில், அதாவது கூனியூரில் இருந்து சேரன்மகாதேவிக்கு சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் தற்போது திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து ஆா்.சி. பள்ளிக்கு அருகிலுள்ள ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.

இதனால் அசோக்நகா், சத்தியமூா்த்தி காலனி, மல்லிகை நகா் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவா்கள் சுமாா் 2 கி.மீ. தொலைவு சென்று பாலம் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், ரேஷன் கடைக்கும், அவசரமாக மருத்துவமனைக்கும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி ரயில்வே கேட் மூடப்பட்டுள்ள ஆா்.சி. பள்ளி அருகில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.