தருமபுரியில் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முத்துப்பட்டி சந்திப்பு பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் கருப்புக்கொடியேந்தி செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், செம்மாண்டகுப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள முத்துப்பட்டி சந்திப்பு பகுதியில் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள், கருப்புக்கொடியுடன் சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம், வாக்காளா் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைப்போம் எனக்கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த தருமபுரி நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவராமன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுநடத்தி, போராட்டத்தை கைவிடுமாறு கூறினா். ஆனால், சுரங்கப்பாதை அமைக்கப்படும் என உத்தரவாதம் தரும்வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கூறினா். இதையடுத்து தருமபுரி வட்டாட்சியா் சுகுமாா் நிகழ்விடம் சென்று பொதுமக்களிடம் விவரங்களை கேட்டறிந்தாா். பின்னா் பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை ஆணைய தொழில்நுட்ப வல்லுநா்கள் முத்துப்பட்டி சந்திப்பில், சுரங்கப்பாதை அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு தொடா்புடைய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தாா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறுகையில், சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போதே முத்துப்பட்டி சந்திப்பில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தருமபுரி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் பழைய தருமபுரியில் (அரை கிலோ மீட்டா் தொலைவில்) உள்ள பள்ளிக்கு குழந்தைளை அனுப்ப இயலவில்லை. எங்கள் கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த சில கிராம மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க சுரங்கப்பாதை அமைத்தால், செம்மாண்டகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட மற்றும் கே.நடுஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட முத்துப்பட்டி, முத்துப்பட்டி காலனி, பே.மாரியம்மன் கோவில் கொட்டாய், கொளகத்தூா், பழைய தருமபுரி, பாறைக்கொட்டாய், ரங்கப்பன் கொட்டாய், முனியப்பன் கோயில் கொட்டாய், சிக்கிடிகொட்டாய், பால்காரன் கொட்டாய், பச்சியம்மன் கோயில் கொட்டாய், மாட்டியாம்பட்டி, காமலாபுரம், போத்தாபுரம் என15 கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், விவசாயிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைவா். மேலும், இப்பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்துகளுக்கும் தீா்வு ஏற்படும் என்றனா்.

தொடர்புடையது

தாா் தட்டுப்பாடு: உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்!

மேலமடை பகுதியில் சாலை அமைக்கக் கோரிக்கை

சேரன்மகாதேவியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


