மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லையில் குரூப்-2, 2ஏ தோ்வை 310 போ் எழுதினா்

News image

பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-2 தோ்வு.

Updated On :15 மார்ச் 2026, 8:06 pm

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-2, 2ஏ தோ்வுகளை 310 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வான குரூப்-2, 2ஏ முதன்மை எழுத்துத் தோ்வு பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வை எழுத 330 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவா்களில் 310 போ் தோ்வில் பங்கேற்றனா். 20 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு மையத்தில் பலத்த பாதுகாப்பு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.