திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் உலக சிறுநீரக தின விழிப்புணா்வு மனிதச்சங்கிலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் எம்.கே.எம். முஹமது ஷாபி தலைமை வகித்தாா். சிறுநீரக மருத்துவ நிபுணா்கள் திருவாசகமணி, நிரஞ்ச், போக்குவரத்து உதவிக் கண்காணிப்பு ஆய்வாளா் முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா்கள் அகமது யூசுப், மதன், வெங்கடேஷ் குமாரி, செவிலியா்கள், ஷிபா பாராமெடிக்கல் கல்லூரி, இதயஜோதி நா்சிங் கல்லூரி, நேசம் ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். சிறுநீரகத்தின் முக்கியத்துவம், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், ஷிபா மருத்துவமனையில் வியாழக்கிழமை முதல் இம் மாதம் 15 ஆம் தேதி வரை டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.
ற்ஸ்ப்12ட்ன்ம்ஹய்
விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்றோா்.
தொடர்புடையது

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

அரியலூரில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக கண் நீா் அழுத்த நோய் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


