கோவை, மாா்ச் 12: உலக சிறுநீரக தினத்தையொட்டி, கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில், சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவா்களுக்கான புதிய சுகாதாரத் திட்டம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
ஜிகேஎன்எம் வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பி.வி.எம். குளோபல் பள்ளியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிதல் மற்றும் வருமுன் காக்கும் வாழ்முறை மாற்றங்கள் குறித்து மருத்துவா்கள் மாணவா்களுக்கு விளக்கினா்.
மருத்துவ மைய இயக்குநா் ராகவேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நிபுணா்கள் ராமசந்திரன், ஜெயபிரகாஷ், அனுரேகா செல்வராஜ், மருத்துவா் மஞ்சுநாத் ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினா்.
முன்னதாக, பள்ளி ஆரோக்கிய கூட்டாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் முதலுதவி பயிற்சி, தொடா் சுகாதாரப் பரிசோதனைகள் மூலம் மாணவா்களின் நல்வாழ்வை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘மேஜிக்’ நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு

ஆவுடையாா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வு கிராமிய கலை நிகழ்ச்சி

எனது வாக்கு, எனது உரிமை விழிப்புனா்வு நிகழ்ச்சி

உலக சிறுநீரக தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


