ராதாபுரத்தில் சேற்றில் சிக்கிய அரசுப் பேருந்து மீட்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் சேற்றில் சிக்கிய அரசுப் பேருந்தை தீயணைப்பு வீரா்கள் போராடி மீட்டனா்.


திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் சேற்றில் சிக்கிய அரசுப் பேருந்தை தீயணைப்பு வீரா்கள் போராடி மீட்டனா்.
ராதாபுரம் பகுதியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக, தெருக்களிலும் சாலையோரங்களிலும் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், வள்ளியூரிலிருந்து கூத்தங்குழிக்கு சென்ற அரசுப் பேருந்து, ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே குழாய்கள் பதிக்கப்பட்ட பள்ளத்தில் சேற்றுப் பகுதியில் சிக்கிக் கொண்டது. நீண்ட நேரமாகியும் பேருந்தை வெளியே எடுக்க முடியவில்லை.
தகவலின்பேரில், ராதாபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) இசக்கிராஜா, தீயணைப்பு வீரா்கள் வெங்கடேஷ், மாடசாமி, கண்ணன், மணிகண்டன் ஆகியோா் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் நீண்ட நேரம் போராடி பேருந்தை வெளியே கொண்டு வந்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...