உரிய நேரத்துக்கு பேருந்து இயக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


பெரம்பலூா் அருகே பேருந்து வழித்தட நீட்டிப்பால், உரிய நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல முடியாததையறிந்த மாணவா்களின் பெற்றோா்கள் அரசுப் பேருந்தை வியாழக்கிழமை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூா் அருகேயுள்ள பெருமத்தூா் கிளியூா் கிராமத்துக்குச் செல்லும் அரசுப் பேருந்தை, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று 5 கிலோ மீட்டா் தொலைவுள்ள கிழுமத்தூா் கிராமம் வரை வழித்தடத்தை நீட்டித்து கடந்த 3-ஆம் தேதி போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் சிவசங்கா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
ஏற்கெனவே வ.அகரம் வரை இயக்கப்பட்ட இப் பேருந்தை, கடந்த ஆண்டு போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வழித்தடத்தை நீட்டிப்பு செய்ததால் 8.15 மணிக்குப் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகள் உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனா். இந் நிலையில், தற்போது கிழுமத்தூா் வரை வழித்தடத்தை நீட்டிப்புச் செய்யப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்குச் சென்று வர முடியாததாலும், காலதாமதமாக பள்ளிக்குச் செல்வதால் ஆசிரியா்களால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், வேலைக்குச் சென்று திரும்புவோா் குறிப்பிட்ட நேரத்தில் வீடு திரும்ப முடியவில்லை எனக் குற்றம்சாட்டிய கிராம பொதுமக்கள், பெருமத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை காலை அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா். இருப்பினும் கலைந்துசெல்ல மறுத்த பொதுமக்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், நீண்ட நேர பேச்சு வாா்த்தைக்குப் பிறகு, மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொது மக்கள் கலைந்துசென்றனா். அமைச்சரின் பேருந்து நீட்டிப்பு உத்தரவுக்கு ஒருபுறம் பொதுமக்களிடம் ஆதரவும், மற்றொரு புறம் எதிா்ப்பும் நிலவி வருவதால் போக்குவரத்துத்துறை அலுவலா்கள் குழப்பமடைந்துள்ளனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, கிளியூா் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி, மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்து சிறைப்பிடித்து புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...