/

கல்லிடைக்குறிச்சி அருகே கரடிகள் அட்டகாசம்! வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

News image
செங்கற்களைத் தள்ளிவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடி.
Updated On :25 ஜனவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தெற்குப் பாப்பான்குளத்தில் செங்கல் தயாரிப்புக் கூடத்துக்குள் கரடி நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இம்மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளிலும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளிலும் அண்மைக்காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, விக்கிரமசிங்கபுரம், செட்டிமேடு, மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, கருத்தப்பிள்ளையூரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் அவை உலா வருவது அதிகரித்துள்ளது.

 செங்கற்களைத் தள்ளிவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடி.

செங்கற்களைத் தள்ளிவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடி.

 செங்கற்களைத் தள்ளிவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடி.

செங்கற்களைத் தள்ளிவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடி.

இந்நிலையில், தெற்குப் பாப்பான்குளத்தில் உள்ள சாம்பல் செங்கல் உற்பத்திக் கூடத்துக்குள் அவை சனிக்கிழமை இரவு நுழைந்து, அடுக்கிவைத்துள்ள செங்கற்களைத் தள்ளிவிட்டும், பாத்திரங்களை உருட்டியும் அட்டகாசத்தில் ஈடுபட்டது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

வனத்திலிருந்து வெளியேறும் கரடிகள், குடியிருப்புகளின் அருகேயுள்ள பொத்தை, புதா்களில் பதுங்கிக்கொண்டு தொடா்ந்து அச்சுறுத்தி வருவதாகவும், எனவே அவற்றைக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.