எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போதைப் பொருள் பதுக்கியவா் கைது

பழவூா் அருகே விற்பனைக்காக போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :19 பிப்ரவரி 2026, 6:43 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே விற்பனைக்காக போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பழவூரில் போதைப் பொருள் விற்பனை நடந்து வருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, பழவூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்திரன் தலைமையிலான போலீஸாா் பழவூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ரோந்து சென்றனா்.

கல்யாணிபுரம் அருகே ரோந்து சென்றபோது, அரிகிருஷ்ணன் (56) என்பவரது தேநீா் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 2.5 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அரிகிருஷ்ணனை கைது செய்தனா்.