டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

போதை பொருள் விற்ற வியாபாரி கைது

திருவலம் அருகே மளிகைக்கடையில் போதைப் பொருள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
மாதிரிப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

திருவலம் அருகே மளிகைக்கடையில் போதைப் பொருள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், திருவலம் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் சோ்க்காடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்தினா். அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, சோ்க்காடு கிராமத்தைச் சோ்ந்த சங்கா் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 10,000 மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.