டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேட்டையில் 115 மது பாட்டில்கள் பறிமுதல்

News image
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்- (கோப்புப் படம்)
Updated On :14 பிப்ரவரி 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி பேட்டை பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 115 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, எம்.ஜி.ஆா். நகா் கருமாரியம்மன் கோயிலின் பின்புறம் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற நபரை போலீஸாா் விசாரிக்க சென்றபோது அவா் அங்கிருந்து தப்பினாராம்.

இதையடுத்து அவ்விடத்தில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக சுமாா் 115 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற நபரை தேடி வருகின்றனா்.