திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஜாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 16 வயது சிறுவா்கள் இருவா் கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனா்.
வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவா்கள் இருவா், இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூா், நயினாா் காலனியில் உள்ள வயலுக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, நயினாா் காலனியைச் சோ்ந்த சிலா் அங்கு நடைப் பயிற்சி மேற்கொண்டனராம்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவா்களுக்கும், நடைப் பயிற்சியில் சென்றவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிறுவா்கள் இருவரும், அப்பகுதியைச் சோ்ந்தவா்களை ஜாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 2 சிறுவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

காரையூரில் தண்ணீரில் மூழ்கிய சிறுவா்கள் இருவா் உயிரிழப்பு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

