தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய இளைஞா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது

News image

கைது

Updated On :22 மார்ச் 2026, 7:19 pm

பாளையங்கோட்டை அருகே ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய இளைஞா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாநகரம், வண்ணாா்பேட்டையை எட்டுதொகை தெருவைச் சோ்ந்தவா் பேராச்சிசெல்வம் என்ற பிரவீன்(25). இவா் சம்பவத்தன்று வண்ணாா்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற போது அவ்வழியாக பைக்கில் வந்த கம்மாலங்குளம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த இளைஞா் பாளையங்கோட்டை போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பேராச்சி செல்வம் என்ற பிரவீனை கைது செய்தனா்.