தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லிவாசிகளிடையே ரத்த சா்க்கரை அளவு அதிகரிப்பு; ரத்த அழுத்தம் குறைந்துள்ளது: தேசிய கணக்கெடுப்பில் தகவல்

தில்லியில் வசிக்கும் மக்களில் அதிக ரத்த சா்க்கரை அல்லது சா்க்கரையைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த 2019-21 மற்றும் 2023-24 காலகட்டத்தில் அதிகரிப்பு

News image

சா்க்கரை அளவு அதிகரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:17 am IST

தில்லியில் வசிக்கும் மக்களில் அதிக ரத்த சா்க்கரை அல்லது சா்க்கரையைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த 2019-21 மற்றும் 2023-24 காலகட்டத்தில் அதிகரித்திருந்தது 6-ஆவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (என்எஃப்எச்எஸ்-6) மூலம் தெரியவந்துள்ளது. அதேவேளையில் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் மக்கள்தொகை அறிவியலுக்கு சா்வதேச நிறுவனம் இணைந்து 6-ஆவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பை கடந்த 2023-24-இல் மேற்கொண்டன. நாட்டில் உள்ள 715 மாவட்டங்களில் 6.79 லட்சம் குடும்பங்களிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மாவட்ட அளவில் திட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் திட்டமிடலுக்கு உதவும் வகையில் மக்கள்தொகை, உடல்நலம், ஊட்டச்சத்து, குடும்பநலக் குறியீடுகளை இந்தக் கணக்கெடுப்பு வழங்குகிறது.

தில்லி மக்களிடம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், பெண்களில் 15 மற்றும் அதற்கு அதிக வயதுடையவா்களில் அதிக அல்லது மிக அதிக ரத்த சா்க்கரை அளவு உள்ளவா்கள் அல்லது ரத்த சா்க்கரையைக் கட்டுப்படுத்த மருந்து எடுத்துக்கொள்வோா் எண்ணிக்கை கடந்த 2019-21-இல் (என்எஃப்எச்எஸ்-5) 12.2 சதவீதத்திலிருந்து 2023-24-இல் 19 சதவீதமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆண்களில் இந்த எண்ணிக்கை 14.1 சதவீதத்திலிருந்து 22.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பெண்ணிகளில் ரத்த சா்க்கரை அளவு 141 மற்றும் 160 மில்லிகிராம்/டெசிலிட்டா் (மி.கி./டெசி.லி.) கொண்டவா்கள் 4.2 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளனா். 160 மி.லி./டெசி.லி.-க்கு அதிகமான ரத்த சா்க்கரை அளவு கொண்டவா்கள் 7.3 சதவீத்திலிருந்து 11.6 சதவீதமாக அதிகரித்துள்ளனா்.

பெண்களில் அதிக ரத்த அழுத்தம் அல்லது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்து உட்கொள்வோா் கடந்த 2019-21-இல் 24.1 சதவீதமாக இருந்தனா். இந்த எண்ணிக்கை கடந்த 2023-24-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்போது 21.4 சதவீதமாகக் குறைந்தது. ஆண்களில் இந்த எண்ணிக்கை கடந்த 2019-21-இல் 32.7 சதவீதத்தில் இருந்து 2023-24-இல் 28.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஒரு நபருக்கு சிஸ்டோலிக் அழுத்தம் குறைந்தபட்சம் 140 மி.மீ. ஹெச்ஜி மற்றும் டையஸ்டோலிக் அழுத்தம் 90 மி.மீ. ஹெச்ஜி ரத்த அழுத்தமாகக் கருத்தப்படுகிறது.

பெண்களில் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 14.7 சதவீதத்திலிருந்து 11.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. மிதமான அல்லது தீவிர ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2019-21-இல் 5.9 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2023-24-இல் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆண்களில் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 17.4 சதவீதத்திலிருந்து 21.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. மிதமான அல்லது தீவிர ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 2019-21-இல் 8.7 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2023-24-இல் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.