சட்டவிரோத மதுபானங்களை கடத்திய 3 பேரை கைதுசெய்த தில்லி காவல் துறை, தில்லி மற்றும் பெங்களூரில் 154 பெட்டிகளில் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இந்த நடவடிக்கையின்போது, தில்லியில் 80 பெட்டிகள், பெங்களூரு யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் 74 பெட்டிகள் என மொத்தம் 154 பெட்டிகளில் சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மெஹ்ரெளலி பகுதியில் கடந்த மே 18-ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், ஒரு டெம்போவை மறித்து சோதனை செய்தனா். அகிலேஷ் குமாா் சிங் ஓட்டி வந்த அந்த வாகனத்தில் இருந்து சட்டவிரோத மதுபானங்களை கொண்ட 63 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், உபேந்தா் சிங் மற்றும் அவருடைய மகன் அங்கித் சிங் ஆகியோரது அறிவுறுத்தலில் மதுபான பெட்டிகளை ரயில் நிலைய பாா்சல் மையத்துக்கு கொண்டு சென்ாக அகிலேஷ் குமாா் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, ராஜ்பூா் குா்த் பகுதியில் வசித்து வரும் உபேந்தா் சிங்கின் வீட்டில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது, 11-க்கும் அதிகமான பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனா். அவா்களுக்குச் சொந்தமான காரில் இருந்து 6 மதுபான பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடா்விசாரணையில், குருகிராமில் இருந்து அந்த மதுபானங்களை வாங்கி எல்இடி தொலைக்காட்சிகள், மின்னணுசாதனங்கள் என்ற பெயரில் ரயிலில் பாா்சல் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக பெங்களூருக்குச் சென்ற தில்லி காவலா்கள், யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் இருந்த ரயிலில் இருந்து 74 சட்டவிரோத மதுபான பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இந்தக் கும்பல் இதுபோன்று கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோத மதுபானங்களை ரயிலில் பாா்சல் மூலம் அனுப்பி வந்தது. இதில் தொடா்புடைய பிற நபா்களை கைதுசெய்ய காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்-சாண்ட் கடத்தி வந்த டிப்பா் லாரி பறிமுதல்

தாம்பரம்: 266 கிலோ குட்கா பறிமுதல்

கெங்கவல்லியில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்கள் விற்றவா் கைது

விரைவில் நவீன ரயில் பெட்டிகளுடன் இயங்க உள்ள ஏலகிரி விரைவு ரயில்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


