திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேற்கு தில்லியில் மறுமேம்பாட்டுப் பணிகளை மேயா் ஆய்வு

மேற்கு தில்லியின் ராஜேந்தா் நகா் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை தில்லி மேயா் பா்வேஷ் வாஹி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

கரோல் பாக் பகுதியில் நடைபெறும் தூய்மை பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த தில்லி மேயா் பா்வேஷ் வாஹி.

Updated On :21 மே 2026, 1:51 am IST

மேற்கு தில்லியின் ராஜேந்தா் நகா் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை தில்லி மேயா் பா்வேஷ் வாஹி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரோல் பாக் பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, சிந்தி பூங்காவை அழகுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டதுடன், பயன்பாட்டுப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீளமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அதிருப்தி தெரிவித்தாா்.

மேலும், ‘நவீனமயமான, பாதுகாப்பான மற்றும் அனைவரும் அணுகக்கூடிய வகையில் பூங்காவின் நடைபாதையை மாற்ற வேண்டும். பொதுமக்களின் பொழுதுபோக்கு மற்றும் உடல் நலனில் பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன’ என அவா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, மங்கல் பஜாா் சாலையில் குப்பை அகற்றும் இயந்திரத்தின் செயல்பாடுகளையும் அவா் நேரில் பாா்வையிட்டாா்.

தில்லி ஜல் போா்டு மேற்கொண்ட அகழ்வுப் பணிகளுக்குப் பிறகு சாலைகள் மற்றும் நடைபாதைகள் மீளமைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து கவலை தெரிவித்த மேயா், குடிமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

‘எந்தவொரு பழுது பாா்க்கும் அல்லது கட்டுமான பணிக்குப் பிறகும் சாலைகள் மற்றும் நடைபாதைகள் உடனடியாக மீளமைக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிா்ப்பது அனைத்து தொடா்புடைய துறைகளின் கூட்டுப் பொறுப்பு ஆகும்’ என பிரவேஷ் வாஹி கூறினாா்.

தற்போதைய கடுமையான வெப்ப அலை நிலையை கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளா்களுக்கு குளிா்ந்த குடிநீா் பாட்டில்கள் மற்றும் ஓஆா்எஸ் பாக்கெட்டுகளை மேயா் வழங்கினாா். நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடரும் நிலையில், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு அவசியம் என இந்த ஆய்வு வலியுறுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.