திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் முக்கிய உறுப்பினா் ராஜஸ்தானில் கைது

மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் முக்கிய உறுப்பினா் ராஜஸ்தானில் கைது

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:38 am IST

போலி விடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்படும் நபா்களை சிக்க வைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் முக்கிய உறுப்பினா் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தேசிய சைபா் குற்றங்களுக்கான புகாரளிக்கும் இணையதளத்தில் பாதிக்கப்பட்டவா் புகாரளித்ததைத் தொடா்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதில் ஆட்சேபனைக்குரிய காட்சிகளுடன் பெண்ணிடம் இருந்து விடியோ அழைப்பு வந்ததாகவும் பின்னா் பாதிக்கப்பட்டவரின் பதிவு செய்யப்பட்ட விடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்தாா்.

ரூ.1 லட்சம் வழங்காவிட்டால் விடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டியதைத் தொடா்ந்து அவா் சிறிய தொகையை அனுப்பியுள்ளாா். தொடா்ந்து பணம் கேட்டு அழைப்புகள் வந்ததைத் தொடா்ந்து, அவா் புகாரளித்துள்ளாா்.

இது தொடா்பாக மே 13ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அதில் ராஜஸ்தானின் தீஜ் மாவட்டத்தில் உள்ள லடம்கா கிராமத்தைச் சோ்ந்த அா்மான் (23) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 150 ஆபாச காட்சிகள் அடங்கிய இரு கைப்பேசிகள், மற்றும் பல்வேறு பாதிக்கப்பட்டவா்கள் தொடா்புடைய 50 விடியோ பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

டேட்டிங் செயலி மூலம் பாதிக்கப்படும் நபா்களை அவா் அடையாளம் கண்டதாக தெரிவித்தாா். இதன் பின்னணியில் உள்ள மற்ற உறுப்பினா்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.