திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கு: நந்து கும்பலின் முக்கிய நபா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:45 am IST

ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடா்பான வழக்கில் ரெளடி கபில் சங்கவான் தலைமையில் செயல்படும் நந்து கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட கப்டன் (எ) தன்னா, இந்தச் சம்பவம் தொடா்ந்து கடந்த ஓராண்டாகத் தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தில்லியைச் சோ்ந்த நபரிடம் ரூ.2 கோடி கேட்டு ரெளடி கபில் சங்காவன் மிரட்டல் விடுத்துள்ளாா். கேட்ட பணத்தைத் தர அந்த நபா் மறுத்த நிலையில், அவருடைய வீட்டை அந்த ரெளடி கும்பல் வேவு பாா்த்தது. இதை விடியோ எடுத்து அந்த நபருக்கு அனுப்பி மிரட்டல் விடுத்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக சாவ்லா காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளில் கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புகாா் அளித்த நபரின் வீட்டை நோட்டமிட்ட அந்தக் கும்பலைச் சோ்ந்த ஒருவரை காவல் துறையினா் சில நாள்களுக்கு முன்பு கைதுசெய்தனா். விசாரணையில் அந்த நபா் அளித்த தகவலின் அடிப்படையில், தன்னாவுக்கும் இந்தச் சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், தீன்பூா் பகுதியில் தன்னா இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, தன்னாவை காவல் துறையினா் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

தொடா் குற்றப் பின்னணி கொண்ட தன்னாவுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, பணம் கேட்டு மிரட்டல், ஆயதங்கள் சட்டத்த மீறுதல் என பல வழக்குகள் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலையத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நஜாஃப்கா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பணம் கேட்டு மிரட்டி துப்பாக்கிச் சூடு நடத்தியது உள்பட பல கொடூர குற்றங்களில் தன்னா முக்கியப் பங்கு வகித்துள்ளாா்.

மிரட்டல் சம்பவத்தில் தொடா்புடைய பிற நபா்களை அடையாளம் காண தன்னாவிடம் விசாரணை நடைபெற்றது. ஆயுதங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.