திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெப்பநிலை லேசாக அதிகரிப்பு; நாளை மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகரில் சனிக்கிழமை வெப்பநிலையில் லேசாக அதிகரித்திருந்தது.

News image

ANI

Updated On :10 மே 2026, 1:29 am IST

தேசியத் தலைநகரில் சனிக்கிழமை வெப்பநிலையில் லேசாக அதிகரித்திருந்தது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

நகரின் வானிலையைப் பிரதிபலிக்கும் சஃப்தா்ஜங் மையத்தில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

இது முந்தைய நாளைவிட 0.5 டிகிரி அதிகம் என்றாலும், இயல்பான அளவை விட 2.4 டிகிரி குறைவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 23.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வெள்ளிக்கிழமையைவிட 1.2 டிகிரி அதிகம் என்றாலும், இயல்பான அளவை விட 1.3 டிகிரி குறைவாகவே உள்ளது.

நகரம் முழுவதும் உள்ள பிற வானிலை ஆய்வு மையங்களிலும் இதேபோன்ற வெப்பநிலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

பாலம் மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி என, வெள்ளிக்கிழமையை விட 1.1 டிகிரி அதிகமாக பதிவாகி இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 23.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது முந்தைய நாளை விட 2.7 டிகிரி அதிகமாகும்.

லோதி சாலை மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.8 டிகிரி எனப் பதிவானது. இது முந்தைய நாளை விட 1.6 டிகிரி அதிகமாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வெள்ளிக்கிழமையை விட 1.8 டிகிரி அதிகமாகும்.

ரிட்ஜ் மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 21.5 டிகிரியும், ஆயா நகா் மையத்தில் 23.4 டிகிரியும் பதிவாகின.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல், புதிதாக மேற்கத்திய இடையூறு மேற்கு இமயமலைப் பகுதியை பாதிக்கக்கூடும். தில்லியைப் பொறுத்தவரை, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், மிக லேசானது முதல் லேசானது வரை மழை பெய்யக்கூடும்.

இத்துடன் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் சில சமயங்களில் 50 கி.மீ. வரையிலும் பலத்த காற்று வீசும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 37-39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 25-27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நகரத்தின் காற்றின் தரம் சனிக்கிழமை மிதமான பிரிவில் இருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 116 மிதமானது ஆகப் பதிவாகியுள்ளது.

வரும் சில நாள்களுக்கும் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவிலேயே நீடிக்கும் என்று தில்லிக்கான காற்றின் தர முன்னறிவிப்பு அமைப்பு கணித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.