மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடும்பச் சண்டையில் பெண்ணை கத்தியால் குத்திய கணவா்

வடமேற்கு தில்லியின் கேசவ்புரம் பகுதியில் புதன்கிழமை அன்று, ஒரு குடும்பச் சண்டையின் போது ஒரு பெண் தனது கணவரால் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 12:15 am

வடமேற்கு தில்லியின் கேசவ்புரம் பகுதியில் புதன்கிழமை அன்று, ஒரு குடும்பச் சண்டையின் போது ஒரு பெண் தனது கணவரால் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: ட்ரை நகரில் உள்ள ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. அங்கு, கடுமையான வாக்குவாதத்தின் போது தனது கணவா் சமையலறை கத்தியால் தன்னைத் தாக்கியதாகவும், இதில் தனது தாடை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளாா்.

கேசவ்புரம் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரு போலீஸ் குழுவினா், காயமடைந்த பெண்ணான பிரதிபா வந்தனா மற்றும் அவரது கணவா் சஞ்சீவ் குமாா் ஆகிய இருவரையும் கண்டறிந்தனா்.

இருவருக்கும் 42 வயது. அப்பெண் உடனடியாக தீப் சந்த் பந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா் அவா் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா். சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை உயரதிகாா் கூறினாா்.