எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பங்கேற்பு அரசியலுக்காகவே கட்சியை தொடங்கினேன்: ம.நீ.ம. தலைவா் கமல்ஹாசன்

பங்கேற்பு அரசியலில் ஈடுபடவே மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினேன் என்று மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :14 மார்ச் 2026, 4:59 pm

பங்கேற்பு அரசியலில் ஈடுபடவே மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினேன் என்று மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்தாா்.

தில்லியில் முன்னாள் ஆளுநரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபோல கிருஷ்ண காந்தி எழுதிய ஐய்க்ண்ஹ ஹய்க் ட்ங்ழ் ச்ன்ற்ன்ழ்ங்ள் எனும் ஆங்கில நூலை சனிக்கிழமை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியதாவது:

இந்தப் புத்தகம் காந்தியின் மறைவுக்கு பின்பான பல்வேறு விஷயங்களை பேசுகிறது. முக்கியமாக பிரிவினைக்கு பிந்தைய அகதிகள் குறித்து பேசுகிறது. தேச பக்தி என்றால் என்ன? என்பது குறித்து விவாதிக்கிறது. இந்த நூல் ஆங்கிலத்தோடு நின்றுவிடாமல் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட வேண்டும்.

உலகத்தில் மய்யமாக இருக்கும் ஒரே கட்சி என்னுடையதுதான். நான் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதே பங்கேற்பு அரசியலுக்காகத்தான். நான் இப்போது எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடும் அதுவேதான் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் மனைவி குருசரண் கெளா் இந்த நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டாா். மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டோஸ், பிரசாா் பாரதியின் முன்னாள் தலைவா் மிரினால் பாண்டே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.