விஜய் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவரவான தவெக தேர்தலில் தனித்து களம்காண்கிறது.
அக்கட்சி 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்து விஜய் பிரசாரம் செய்து வருகிறார். கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் திமுக வேட்பாளரையே எதிர்த்து களமிறங்குகிறார்.
இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார். கமலில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் தொடர்பான அட்டவணையை திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில், விஜய் போட்டியிடும் பெரம்பூரில் ஏப்ரல் 17ஆம் தேதியும், திருச்சி கிழக்கில் ஏப்.20ஆம் தேதியும் கமல் பிரசாரம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Makkal Needhi Maiam president Kamal Haasan is set to campaign in support of DMK in the Perambur and Trichy East constituencies, where Vijay is contesting.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"தலைவன் இருக்கின்றான்" - கமல் தேர்தல் பிரசார பாடல் வெளியீடு!

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!

விஜய்யின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் எத்தனை வேறுபாடுகள்?
பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத சமூகம் நாகரீக சமுதாயமாக இருக்க முடியாது: கமல்ஹாசன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


