இயக்குநர் சேரன் ஜன நாயகன் படத்தின் கசிவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சிந்திக்கும்படியான பதிவை பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தனது கடைசி திரைப்படமாக நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையினால் இன்னும் திரையரங்கில் வெளியாகாமல் இருக்கிறது.
ஜன நாயகன் திரைப்படம் நேற்று முன்தினம் (ஏப்.9) கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று (ஏப்.10) அதிகாலை 3 மணி அளவில் எச்டி பிரிண்ட் முழுவதும் இணையதளங்களில் வெளியாகி இருந்தது.
இந்தப் படத்தின் பதிப்பை யார் வெளியிட்டார்கள் எனத் தெரியாத நிலையில், அதை யாரும் பகிர வேண்டாம் என படக்குழு வக்கீல் நோட்டீஸ் அளித்திருந்தது. இந்த நிலையில், சேரன் கூறியிருப்பதாவது:
ஒரு திரைப்படம் வாட்டர்மார்க் (watermark) போட்டு அனுப்பப்படுகிறது என்றால் அது டப்பிங், எஸ்எஃப்எக்ஸ், ரீரிக்கார்டிங், டிஐ, மிக்ஸ் (dubbing, SFX, RR, DI, Mix) இந்தத் துறைகளுக்குதான் செல்லும். அந்தத் துறைகளுக்கு மட்டும்தான் வாட்டர்மார்க் போடுவோம். இல்லை, ஏதாவது வியாபார விஷயம் என்றால் For Businesse purpose, Festival copy, Censor copy என போடுவோம்.
எல்லா காட்சிகளையும் தொகுத்து அனுப்பும் எடிடில் இருந்து இதுவரை Edit Ref என்று or Edit copy என்று அனுப்பியதே இல்லை. அதுவும் எடிட்லதான் படமே ரெடியாகும்... அப்போது அவங்களுக்கு அந்த watermark போட்டு எப்படி வரும்... ஜனநாயகன் குழு இதை தீவிரமாக விசாரிக்கனும் அல்லது போலீஸ் இதை தீவிரமாக விசாரிக்கனும்.. எங்கயோ தவறு உள்ளிருந்தே நடந்திருக்கு. Edit Ref னு போடும்போது அதுல final mix copy யா இருக்க வாய்ப்பில்லை... Jan14 தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.. கிட்டத்தட்ட படம் வெளியாகி 5 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய நேரம்.. அதுவும் water mark ரொம்ப தெளிவா வெள்ளை நிறத்தில் பளிச்சின்னு இருக்கு..
ஆக இந்த களவு edit துறை சார்ந்தவர்களை வீணாக குற்றவாளிகளாக்கும்.. அல்லது மற்ற கலைஞர்களின் நன்மதிப்பைக் கெடுக்கும்.. அறிவார்ந்த திரைத்துறை நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்துழைக்கவும்... களவு நமது துறை ஆட்களால் நடந்ததா அல்லது நமது துறையைப் பயன்படுத்துகிறார்களா என சிந்திக்கவேண்டும். ஆனால், பெரும் முதலீட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்தை திருடர்கள் மனசாட்சியின்றி வெளியிட்டு இப்படி தரம் கெட்டு நடப்பதை ஒரு இயக்குனராக கண்டிக்கிறேன். ஜனநாயகம் கேள்வியாகி கொண்டிருக்கிறது.. நடவடிக்கை தேவை எனக் கூறியுள்ளார்.
Summary
Where Did the 'Jananayagan' Theft Take Place? Cheran's Post Sparks Reflection!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இணையத்தில் கசிந்த ஜன நாயகன் படத்துக்கு விமர்சனம்..! சிக்கலில் இயக்குநர் அமீர்!

ஜன நாயகன் படத்தை காத்திருந்து திரையரங்கில் பாருங்கள்! சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!

ஜன நாயகன் படத்தை வெளியிட மாட்டோம்! தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு!

இது விஜய்க்கு அவமானம்: இயக்குநர் சேரன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


