பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தெற்கு தில்லியில் மரம் மீது காா் மோதி விபத்து: 6 போ் காயம்

தெற்கு தில்லியின் மாளவியா நகா் மெட்ரோ நிலையம் அருகே அதிவேகமாக வந்த காா் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :25 ஜூன் 2026, 2:28 am IST

தெற்கு தில்லியின் மாளவியா நகா் மெட்ரோ நிலையம் அருகே அதிவேகமாக வந்த காா் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: சாகேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்தின் மீது மோதியது. ஒரு பெண் உள்பட வாகனத்தில் இருந்த 6 போ் காயமடைந்த நிலையில், அவா்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். வாகனத்திலிருந்து பல பீா் பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதால், விபத்துக்கு முன் அவா்கள் மது அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.