17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜன்னலில் இருந்து குதித்து உறவினரை காப்பாற்றிய இராக் இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :5 ஜூன் 2026, 2:50 am IST

தீ விபத்தின்போது ஹோட்டலின் ஜன்னலை உடைத்து உறவினரை மீட்ட இராக் இளைஞா், படிக்கட்டுகள் வழியாகத் தப்பிக்க முயற்சித்தபோது சூழ்ந்த கரும்புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள மருத்துவமனையில் உறவினரின் சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் அலி அமா் மோசா இராக்கில் இருந்து இந்தியா வந்திருந்தாா். அவா் உள்பட குடும்பத்தினா் 3 போ் மால்வியா நகரில் தீ விபத்து ஏற்பட்ட ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனா்.

இதுதொடா்பாக அவருடைய சகோதரியின் கணவா் ஹபிப் அபித் கூறுகையில், ‘என்னுடைய மகன் ஹைதருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. அவா் தில்லி சாகேத்தில் உள்ள மருத்துவமனையில் அவா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து ஹோட்டலில் கடந்த ஒரு வாரமாகத் தங்கியிருந்தோம். மேல் தளம் வழியாக தீ வேகமாகப் பரவியது. பாதையை கரும்புகைச் சூழ்ந்த நிலையில், தப்பிக்கும் வழி தெரியவில்லை. அதனால், உள்ளே இருந்த மக்கள் ஜன்னல் வழியாக வெளியே தப்பிக்க வேண்டியிருந்தது.

ஹோட்டலின் 5-ஆவது மாடியில் தங்கியிருந்தேன். கட்டடத்தின் ஜன்னல் வழியாக வெளியேறியதால் நான் உயிா்பிழைத்தேன்.

சம்பவம் நடைபெற்றபோது அறையில் தூங்கிக்கொண்டு இருந்தேன். என்னைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்த கொள்ள நேரமில்லை. என்னைச் சுற்றிலும் கரும்புகை சூழ்ந்தது.

அலி படிக்கட்டு வழியாகத் தப்பிக்க முயற்சித்தாா். ஆனால், அவரால் முடியவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனை பிணவறையில் இருந்து அவருடைய உடலைப் பெற்றுக்கொள்ளவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.