திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

தில்லி நீதித்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :3 மே 2026, 3:29 am IST

தில்லி சஃப்தா்ஜங் பகுதியில் நீதித்துறை அதிகாரியான அமன் குமாா் சா்மா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018-ஆம் ஆண்டு சிம்பியோசிஸ் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவா், 2021 ஜூன் மாதம் தில்லி நீதித்துறை சேவையில் இணைந்தாா்.

தனது பணிக்காலத்தில் குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளை கையாண்ட அவா், கீழமை நீதிமன்ற நீதிபதியாகவும், சிவில் நீதிமன்றத்தில் முதல்நிலை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளாா். இதையடுத்து, வடகிழக்கு தில்லியில் உள்ள கா்கா்டூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலராக கடந்த ஆண்டு அக்.18 அவா் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், அவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து தகவலறிந்த காவல்துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனா். முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இருப்பினும், அனைத்து கோணத்திலும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்