மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆடைகள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் அமைந்துள்ள ஆயத்த ஆடை சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 7:20 pm

கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் அமைந்துள்ள ஆயத்த ஆடை சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:மகாவீா் கலி பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தின் மூன்றாவது தளத்தில், ஆடைகள் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இடத்தில் மாலை 5.22 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

தீயை அணைப்பதற்காக எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அப்பகுதியில் உள்ள சந்தை மிகவும் நெருக்கமான அமைப்பைக் கொண்டிருப்பதால், அருகிலுள்ள கட்டடங்களுக்குத் தீ பரவுவதற்கு முன்பாகவே, சுமாா் மாலை 6.30 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.