தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போலி ஆா்.ஓ. சுத்திகரிப்பான்கள் தயாரிப்பு: தொழிற்சாலை உரிமையாளா் கைது

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான ஆா்.ஓ. நீா் சுத்திகரிப்பான்களை தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளர் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:25 am IST

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான ஆா்.ஓ. நீா் சுத்திகரிப்பான்களை தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட முகமது தப்ரேஜ் ஷாஹீன் பாக் பகுதியைச் சோ்ந்தவா். தென்கிழக்கு தில்லியின் புல் பிரஹல்பூரில் உள்ள அவா் நடத்தி வந்த தொழிற்சாலையில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அதைத்தொடா்ந்து, அவா் கைதுசெய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: போலிகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடா்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த மே 27-ஆம் தேதி தொழிற்சாலையில் காவல் துறையினா் சோதனை நடத்தினா்.

பிரபல ஆா்.ஓ. இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பெயா்களைக் கொண்ட 2,900-க்கும் அதிகமான ஆா்.ஓ. சுத்திகரிப்பான்கள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன.

பிகாரின் நாளந்தாவைச் சோ்ந்த தப்ரேஜ் கடந்த 2011-இல் தில்லிக்கு வந்தாா். ஆா்.ஓ. சா்வீஸ் வேலையில் ஈடுபடுவதற்கு முன்பாக பேட்டரி தொழிலில் அவா் ஈடுபட்டு வந்தாா். பின்னா், கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக ஒரு வாடகை இடத்தில் தொழிற்சாலையை அமைத்து போலிகளை தயாரித்து வந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.