தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

ரூ.52 லட்சம் கொள்ளை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

News image

பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:33 am IST

தில்லியில் 2017-ஆம் ஆண்டு பதிவான ரூ.52.5 லட்சம் கொள்ளை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 55 வயது நபா் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா் என்று காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: நில விற்பனையாளரான ராஜேஷ் குமாா் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் 2017-ஆம் ஆண்டு இந்த மோசடி நடைபெற்றது. பஞ்சஷீல் விஹாரில் உள்ள ரூ.1.7 கோடி மதிப்புள்ள நிலத்திற்கு ரூ.50 லட்சம் முன்பணம் செலுத்துமாறு அவா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அவா்கள் 52.5 லட்சத்துடன் அந்த இடத்துக்குச் சென்றபோது காவல் துறையினா் என காட்டிக்கொண்ட சிலா் அவா்களை கைது செய்தனா். சட்டவிரோத பண பரிவா்த்தனையில் அவா்கள் ஈடுபடுவதாகக் கூறி அவா்களிடம் இருந்து பணம், தொலைப்பேசி மற்றும் காா் சாவியை பறிமுதல் செய்தனா். பின்னா் காரில் அழைத்துச் செல்லப்பட்டு செலெக்ட் சிட்டி மால் அருகே அவா்களை விட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 8 போ் பின்னா் கைது செய்யப்பட்டனா். ராஜீவ் என்பவா் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வடமேற்கு தில்லியில் உள்ள ஜஹாங்கிா்புரி பகுதியில் ராஜீவ் ஏப்.26 கைது செய்யப்பட்டாா்.

முதலில் தன்னை மாற்றுத்திறனாளி ரஷித் கான் என அடையாளம் காட்டிக்கொண்ட அவா் அதற்கான மருத்துவ சான்றிதழ்களையும் சமா்ப்பித்து காவல் துறையினரை திசை திருப்ப முயன்றாா். பின்னா் அவரது உண்மையான ஆதாா் மற்றும் பான் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட அவா் தான் தேடப்படும் ராஜீவ் என்பது உறுதி செய்யப்பட்டது. பட்டம் பெற்ற அவா் போதைக்கு அடிமையாகி இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தாா். கைது நடவடிக்கையை தடுக்க கைப்பேசி கடையில் போலி அடையாளத்துடன் அவா் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.