/

குருகிராம் மருத்துவமனையில் பெண் பாலியல் வன்கொடுமைபல் மருத்துவா் மீது வழக்குப் பதிவு

குருகிராம் நியூ காலனி பகுதியில் உள்ள தனது மருத்துவமனையில் பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பல் மருத்துவா் ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 10:27 pm

தினமணி செய்திச் சேவை

குருகிராம் நியூ காலனி பகுதியில் உள்ள தனது மருத்துவமனையில் பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பல் மருத்துவா் ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து நியூ காலனி காவல் நிலைய அதிகாரி தேஜ்பால் கூறியதாவது: இந்தச் சம்பவம் பிப்ரவரி 15-ஆம் தேதி நடந்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவரும் நொய்டா செக்டா்-4 பகுதியில் வசிப்பவருமான பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, பல் வலிக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் சென்றிருந்தாா்.

பல் பரிசோதனையின் போது டாக்டா் தீரஜ் மேத்தா என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவா் குற்றம் சாட்டினாா். பாதிக்கப்பட்டவா் தனது சட்ட ஆலோசகருடன் நியூ காலனி காவல் நிலையத்தை அணுகி புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 75 (ஏ)- இன் கீழ் பல் மருத்துவா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட பல் மருத்துவா் விரைவில் கைது செய்யப்படுவாா் என்று நியூ காலனி காவல் நிலைய அதிகாரி தேஜ்பால் தெரிவித்தாா்.