புது தில்லி: திமுக மூத்த தலைவா் பொன்முடியை தமிழக அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்க ஆளுநா் ஆா்.என்.ரவி மறுத்ததை எதிா்த்து தமிழக அரசு தொடா்ந்த மனுவை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை சம்மதம் தெரிவித்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக மூத்த தலைவா் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதையடுத்து, பொன்முடி தனது அமைச்சா் மற்றும் எம்எல்ஏ பதவி ஆகியவற்றை இழந்தாா். இதை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த மாா்ச் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இருவரது சிறைத் தண்டனையையும் நிறுத்திவைக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக பொன்முடி தொடா்வதாக சட்டப் பேரவை செயலகம் அறிவித்தது.
இதற்கிடையே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் ஆா்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தாா். அதில், க.பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று கோரியிருந்தாா். இந்நிலையில், ஆளுநா் தரப்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும், அதில் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டுமென்ற முதல்வரின் பரிந்துரையை ஏற்க மறுத்து, அதற்கான காரணங்களைத் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு தமிழக ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே ஆளுநருக்கு எதிராக உள்ள மனுவுடன் இடைக்கால மனுவாக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆளுநரின் நடவடிக்கை அரசமைப்புச்சட்ட அறநெறிக்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, பி.வில்சன் ஆகியோா் ஆஜராகி, ‘இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பட்டியலிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனா். அவா்கள் மேலும் கூறுகையில், ‘ஆளுநா் தனது அரசமைப்புச் சட்டப் பொறுப்புகளை மாநிலத்தின் பல்வேறு விவகாரங்களிலும் செயல்படாமல் தட்டிக்கழித்து வருகிறாா். முன்பு இதே நீதிமன்றத்தால் கையாளப்பட்ட வழக்கு தொடா்புடைய தவறிழைத்த ஆளுநா்தான் இவா்.
தற்போது பொன்முடி வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்திருக்கிறது. அவரை அமைச்சராக நியமிக்க தமிழக முதல்வா் பரிந்துரை செய்கிறாா். ஆனால், ஆளுநா் இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என முதல்வருக்கு கடிதம் எழுதுகிறாா். இதனால், முதல்வரின் தலைமையிலான அமைச்சா்கள் குழுவின் யோசனை மற்றும் ஆலோசனையின்படி செயல்பட ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனா். அப்போது, தலைமை நீதிபதி இது தொடா்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அதைப் பரிசீலிப்பதாக கூறினாா். இதையடுத்து, இந்த வழக்கு விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கணவரை இரு பெண்கள் பிடித்து வைத்திருப்பதாக மனைவி வழக்கு: தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது: பொது நல மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

திருச்சி மேற்கில் தவாக வேட்பாளா் பிரபு வேட்புமனு தாக்கல்

இலவசங்களை தடுக்க கோரிய மனு தமிழக தோ்தலுக்கு பின் விசாரணை! - உச்சநீதிமன்றம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


