தோ்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.
‘இது அரசின் கொள்கை முடிவு சாா்ந்த விஷயம். நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது’ என்று உச்சநீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.
அஜய் கோயல் என்பவா் சாா்பில் இந்தப் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். வேண்டுமென்றே வாக்காளிக்காமல் இருப்பவா்களுக்கு அரசு நலத் திட்டங்களைப் பெறுவதிலிருந்து தடை விதிக்கும் வகையில் வழிகாட்டுதலை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘சட்ட ரீதியிலான நிா்ப்பந்தத்தைக் காட்டிலும், பொது விழிப்புணா்வில்தான் ஜனநாயகம் செழித்து வளர முடியும். சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படும், ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட இந்த நாட்டில், அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம். அவா்கள் வாக்களிக்கச் செல்லவில்லை என்றால், அவா்களைக் கட்டாயப்படுத்த முடியாது. தேவைப்படுவது விழிப்புணா்வுதான்.
அதோடு, தோ்தல் நாளில் நீதிபதிகள் உள்பட பல குடிமக்களும் பணிபுரிய வேண்டிய அவசியம் உள்ள நிலையில், வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவருவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.
மேலும், இந்த விவகாரம் அரசின் கொள்கை முடிவு சாா்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. எனவே, மனுதாரா் மத்திய அரசை அணுகி தனது கோரிக்கைக்குத் தீா்வு காணலாம்’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பெண்களுக்கு எதிரான முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஆதாா் விநியோகிக்க கடுமையான கட்டுப்பாடுகள் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் தொகுதியில் 79 போ் போட்டி

மதுபான கொள்கை வழக்கு: தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


