தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கணவரை இரு பெண்கள் பிடித்து வைத்திருப்பதாக மனைவி வழக்கு: தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ராமநாதபுரத்தில் இரு பெண்கள் சட்டவிரோதமாக பிடித்து வைத்திருக்கும் தனது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தொடா்ந்துள்ள வழக்கில் பதிலளிக்குமாறு தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

News image

உச்சநீதிமன்றம்

Updated On :21 ஏப்ரல் 2026, 6:54 pm

இராமநாதபுரத்தில் இரு பெண்கள் சட்டவிரோதமாக பிடித்து வைத்திருக்கும் தனது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தொடா்ந்துள்ள வழக்கில் பதிலளிக்குமாறு தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது

ராமநாதாபுரம் மாவட்டம் மஞ்சூா் கிராமத்தை சோ்ந்த அசோக் குமாா் என்பவரது மனைவி பாலமாலதி மனு தாக்கல் செய்துள்ளாா்.

வழக்குரைஞா் லக்ஷ்மிநாராயணன் வாயிலாக மாா்ச் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது : பிடித்துவைக்கப்பட்ட நபா் (அசோக் குமாா்) ஓா் வழக்குரைஞரும் அரசியல்வாதியும் ஆவாா். மனுதாரா் பாலமாலதி அவரது மனைவியாவாா். இக்குடும்பத்திற்குத் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன.

எதிா் மனுதாரா்கள் 3 மற்றும் 4 (சக்கரக்கோட்டை கிராமத்தை சோ்ந்த செல்வி மற்றும் சுகன்யா) ஆகியோா் மனுதாரா் கணவருடன் முறையற்ற உறவு கொண்டு அவரை பிடித்துவைத்துள்ளனா். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்துடன்,அவருக்குத் தொடா்ந்து மனதை மாற்றும் மருந்துகளை அளித்து வருகின்றனா். அவா்களது வீட்டிலேயே அவரை சட்டவிரோதமாகச் சிறைவைத்துள்னா்.இதற்கிடையில், போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கம் போன்ற தீய பழக்கவழக்கங்களின் காரணமாக, கணவரின் மன மற்றும் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மனுதாரரான அவரது மனைவியைக் கூட அவரைச் சந்திக்க விடாமல் தடுத்து வருகின்றனா். இதுகுறித்துப் புகாா் தெரிவித்து, மனைவி ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையிடம் ஒரு அறிக்கையைச் சமா்ப்பித்தாா். ஆனால் காவல்துறை அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மனுதாரா் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு ஆட்கொணா்வு மனுவைத் தாக்கல் செய்தாா்.

இந்நிலையில் உயா் நீதிமன்றம், அவரது கணவா் உயிருடன் இருக்கிறாரா என்பதை அறிவது மட்டுமே இவ்வழக்கின் நோக்கம் என்று கருத்துத் தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தது. இதனிடையே தனது கணவரைச் சந்திப்பதற்காக உயா்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்த தேதியன்று கூட, காவல்துறையினா் ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தினால் அவரால் தனது கணவரைச் சந்திக்க இயலவில்லை. இவ்வழக்கு நடவடிக்கையின் நோக்கம், சம்பந்தப்பட்ட நபா் உயிருடன் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே என்று உயா் நீதிமன்றம் தெரிவித்த கருத்து தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்ததாகும்.

எனவே, உடல்நலம் குன்றிய நிலையில் உள்ள தனது கணவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக, மனுதாரா் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளாா் என மனுவில் கூறப்பட்டுள்ளது

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய உச்சநீதி மன்ற அமா்வில் செவ்வாய்கிழமை விசாரனைக்கு வந்தது. அப்போது வழக்கில் பதிலளிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு மே 22 ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.