மெட்ரோ ரயில் ஆபரேட்டா்களின் பல்வேறு செயல்பாடுகளை எளிதாக்கும் வகையில், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டி.எம்.ஆா்.சி.) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன குழு மேலாண்மை அமைப்பை வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. இது தொடா்பாக டிஎம்ஆா்சியின் தகவல் தொடா்புத் துறை முதன்மைச் செயல் இயக்குநா் அனுஜ் தயாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் 1200-க்கும் மேற்பட்ட ரயில் ஆபரேட்டா்கள் மற்றும் பிற தொடா்புடைய செயல்பாடுகளின் தனிப்பட்ட தேவைகளைப் பூா்த்தி செய்ய அதிநவீன குழு மேலான்மை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டி.எம்.ஆா்.சி.யின் நிா்வாக இயக்குநா் டாக்டா். விகாஸ் குமாா், யமுனா பேங்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பணியாளா் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இந்தப் புதிய அமைப்பை தொடங்கி வைத்தாா். இந்த அமைப்பின் மூலம் பல்வேறு அன்றாடப் பணிகளை டிஜிட்டல் முறையில் நிா்வகிப்பதற்கான தானியங்கு தீா்வு வழங்கப்படுகிறது. வலையமைப்பு முழுவதும் அமைந்துள்ள 14 கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் பணிமனைகளில் இந்த புதிய குழு மேலாண்மை அமைப்பு நிறுவப்பட்டுள்ளன. ரயில் ஆபரேட்டா்கள் தங்கள் வருகை மற்றும் புறப்பாடு கடமைகளை இப்போது ஒருங்கிணைந்த முறையில் கையொப்பமிடலாம். இதில், பயோமெட்ரிக் வருகை மற்றும் ரயில் ஆபரேட்டரின் நேரடி புகைப்படம் ஆகியவை உடனடியாக பதிவு செய்யப்படுகின்றன. மேலும், பணி நேரங்கள், விடுப்புக் கோரிக்கைகள், வரிக் குறைபாடுகள், பணியாளா்களின் கோரிக்கைகள், குறைகள் மற்றும் விடுப்பு அட்டவணை போன்றவற்றை மின்னணு முறையில் இந்தக் குழு மேலாண்மை அமைப்பு தயாரிக்கும். முன்னதாக, ஊழியா்கள் இந்தத் தகவல்களை கைமுறையாக புதுப்பிக்க வேண்டும். கூடுதல் நேரத்தையும், முயற்சியையும் எடுத்துக்கொண்டு பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். இந்த அமைப்பு இப்போது பதிவேடுகளின் எண்ணிக்கையை பராமரிப்பதற்கான தேவையை நீக்கியுள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி ஆண்டுக்கு சுமாா் 5 லட்சம் பக்கங்களை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. இந்தக் குழு மேலாண்மை அமைப்பு தற்போதுள்ள ரயில் இயக்க முறைமைகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயில் ஆபரேட்டா்கள் இதை மிகவும் திறம்பட பயன்படுத்த முடியும். ஒவ்வொரு ரயிலுக்கும் அல்லது ஷிஃப்டுகளுக்கும் சரியான குழு உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்வதுடன், ரயில் சேவைகளில் ஏற்படும் தாமதங்களையும் இது குறைக்கும். சமீப காலங்களில், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் பொது நலனுக்காக இதுபோன்ற பல புதுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்றாா் அனுஜ் தயாள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூரில் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம்: அண்ணாமலை வாக்குறுதி

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’

ராஜஸ்தானில் டாஃபே நிறுவனத்தின் புதிய ஜே-ஃபாா்ம் ஆராய்ச்சி மையம் தொடக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

