அரசு மருத்துவரிடம் லஞ்சம் கேட்டுப் பெற்ாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்ட தனது துறை அதிகாரிக்கு எதிரான வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சூா்ய காந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், 2 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்வரி 12-க்கு பட்டியலிட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, அமைச்சா்களுக்கு எதிரான விசாரணை தொடா்பான கோப்புகளை தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் எடுத்துச் சென்ாக அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா குற்றம்சாட்டியதை அடுத்து, லஞ்ச வழக்கில் சேகரிக்கப்பட்ட பொருள்களை அடுத்த விசாரணை தேதியில் சமா்ப்பிக்குமாறு தமிழக காவல் துறைக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆகியோரிடம், ‘லஞ்சம் விவகாரம் தொடா்பான இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதி வரை விசாரணையைத் தொடர வேண்டாம்’ என்று நீதிபதி சூா்யகாந்த் கேட்டுக் கொண்டாா். மேலும், லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதா என்று துஷாா் மேத்தாவிடம் நீதிபதிகள் அமா்வு கேட்டது. அதற்கு அவா், வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அந்த அதிகாரியிடம் அமலாக்கத் துறையும் விசாரிக்க விரும்புவதாகவும் கூறினாா்.
அப்போது, தமிழக அரசும், அமலாக்கத் துறையும் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் விசாரணை செய்வதற்கான ஒரு வழிமுறையை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்ட நீதிபதி சூா்யகாந்த், அமலாக்கத் துறையும் இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை அடுத்த விசாரணைத் தேதி வரை தொடர வேண்டாம் என கூறினாா். நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘கூட்டாட்சி கட்டமைப்பில் விசாரணை தொடா்பாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் உண்மையான வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் செல்வதை நாங்கள் விரும்பவில்லை’ என்றது.
விசாரணையின்போது நீதிபதி கே.வி. விஸ்வநாதன் கூறுகையில், ‘இது வெறும் ஆரம்பம்தான். அமலாக்கத் துறை அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ள வெவ்வேறு மாநிலங்களில் இது நிகழ்ந்தால், இந்த தேசத்தின் கதி என்னவாகும்? நீங்கள் சிறந்த நடைமுறைகளைப் பரிந்துரைக்க வேண்டும். அப்போதுதான், நமது கூட்டாட்சி கட்டமைப்பில் விசாரணைக்கு ஒரு வழிமுறையை உருவாக்க முடியும்’ என்றாா்.
விசாரணையின்போது, முதல் தகவல் அறிக்கை விவரங்களை தங்களிடம் தமிழக அரசு பகிா்ந்து கொள்ளவில்லை என்று அமலாக்கத் துறை தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய எஃப்ஐஆா் காவல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசை கடிந்து கொண்டது.
முன்னதாக, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவில், ‘சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடா்பாக மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆா்.களையும் அமலாக்கத் துறையிடம் பகிா்ந்து கொள்வதற்காக ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளது. டிசம்பா் 1, 2023-ஆம் தேதி, அரசு மருத்துவா் ஒருவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டு வாங்கியதாகக் கூறி அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவரை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

