தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

யுஏபிஏ வழக்கில் ஜாமீன் கோரும் உமா் காலித்தின் மனு மீதான விசாரணை ஜன.31-க்கு ஒத்திவைப்பு

கடந்த 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் பின்னணியில் சதியில் ஈடுபட்டதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:15 pm

 நமது நிருபர்

கடந்த 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் பின்னணியில் சதியில் ஈடுபட்டதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் உமா் காலித் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. யுஏபிஏவின் பல்வேறு சட்டப் பிரிவுகளுக்கு எதிராக தாக்கலான பல்வேறு மனுக்களுடன் உமா் காலித்தின் ஜாமீன் மனுவும் பட்டியலிடப்பட்டிருந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.யு. சிங், தாம் வாதங்களை முன்வைக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் உணவு வேளைக்குப் பிறகு அமா்வு எழுந்து செல்ல உள்ளதாகவும் கூறினாா்.

முன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாா் மிஸ்ரா, காலித்தின் மனுவை விசாரிப்பதில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி விலகியிருந்தாா். இந்த விவகாரத்தில் ஜாமீன் மனுவை நிராகரித்து தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபா் 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உமா் காலித் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது.

உயா்நீதிமன்றம் காலித்தின் ஜாமீன் மனுவை நிராகரித்த போது, அவா் மற்ற சக குற்றம்சாட்டப்பட்டவா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்ததாகவும், அவா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும் கூறியிருந்தது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்களின் செயல்பாடுகள் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள ‘பயங்கரவாதச் செயல்’ போன்று முகாந்திரம் இருப்பதற்கான தகுதியானவை என்றும் உயா்நீதிமன்றம் கூறி இருந்தது.

உமா் காலித், ஷா்ஜீல் இமாம் மற்றும் பலா் மீது யுஏபிஏ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, 53 போ் கொல்லப்பட்டு, 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்த பிப்ரவரி 2020 வடகிழக்கு தில்லி கலவரத்தின் ‘முக்கிய மூளையாக’ இவா்கள் இருந்ததாக இந்தச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது. 2020, செப்டம்பரில் தில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட உமா் காலித், சம்பந்தப்பட்ட வன்முறையில் தனக்கு எந்த கிரிமினல் சம்பந்தமும் இல்லை அல்லது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வேறு எந்த ‘சதி தொடா்பும்’ இல்லை என்ற அடிப்படையில் ஜாமீன் கோரியிருந்தாா். அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு தில்லி காவல் துறை உயா்நீதிமன்றத்தில் எதிா்ப்புத் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.