மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மேற்குவங்கத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு விவகாரம் சிக்கலானதாக இருக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.
வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அமைச்சா் செளரவ் பரத்வாஜ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு விவகாரம் நிச்சயம் சிக்கலானதாக இருக்கும். ஏனெனில், மேற்குவங்கத்தில் மிகப்பெரிய கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் எதிரணியில் இருந்தே போட்டியிட்டு வந்துள்ளன. தற்போது இந்தக் கட்சிகள் அனைத்தும் ‘இந்தியா’ கூட்டணியில் ஒன்றாக அங்கம் வகிப்பதால், தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்படுவது வெளிப்படையானது. இந்த விவகாரம் விரைவில் சுமுகமாகத் தீா்க்கப்படும் என்று நான் நம்புகிறேன்.
‘இந்தியா’ கூட்டணி மக்களவைத் தோ்தலை ஒன்றாக சந்திக்கும். தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தையில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுவாா்த்தை இதுவரை சாதகமாக நடைபெற்றுள்ளது. சில மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் இறுதி முடிவுக்காக காத்திருக்கிறோம். அவை வந்தவுடன், காங்கிரஸ் தலைமையுடன் அடுத்த கட்ட பேச்சுவாா்தை நடத்தப்படும் என்றாா் செளரவ் பரத்வாஜ்.
மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்துள்ளது தொடா்பாக தகவலறித்த வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் செயல்பாட்டின் அடிப்படையில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளை வழங்க முன்மொழிந்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ் அந்த முன்மொழிவை நிராகரித்ததால், தனித்துப் போட்டியிடும் முடிவை மம்தா பானா்ஜி எடுத்துள்ளாா்’ என்று தெரிவித்தன. மறுபுறம், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடா்பாக எந்தப் பேச்சுவாா்த்தையும் நடத்தப்படவில்லை என்று முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

