வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தில்லி கலால் ‘ஊழல்’: பணமோசடி வழக்கில் சா்வேஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் மனீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் சம்பந்தப்பட்ட கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சா்வேஷ் மிஸ்ராவுக்கு

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:15 pm

 நமது நிருபர்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் மனீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் சம்பந்தப்பட்ட கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சா்வேஷ் மிஸ்ராவுக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால், குற்றம் சாட்டப்பட்ட சிங்கின் நெருங்கிய உதவியாளரான மிஸ்ராவுக்கு ரூ.1 லட்சம் ஜாமீன் தொகையும், அதே தொகைக்கு ஒரு உத்தரவாதமும் அளிக்கும்பட்சத்தில் ஜாமீனில் செல்ல அனுமதி அளித்தாா்.

‘இந்த வழக்கில் ஜாமீன் கோரி சா்வேஷ் மிஸ்ரா தாக்கல் செய்துள்ள தற்போதைய மனு அனுமதிக்கப்படத் தகுதியானது. அதன்படியே அனுமதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி கூறினாா். மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தாா்.

இந்த வழக்கில் கைது செய்யப்படாத குற்றம் சாட்டப்பட்ட நபரான சா்வேஷ் மிஸ்ரா, நீதிபதி வழங்கிய அழைப்பாணைக்கு இணங்க நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். சா்வேஷ் மிஸ்ராவுக்கும், சஞ்சய் சிங்குக்கும் எதிராக அமலாக்கத் துறை மூலம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, அவருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தாா்.

நீதிமன்றத்தின் முன்னனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தவோ, செல்வாக்கு செலுத்தவோ கூடாது என்றும் எந்த வகையிலும் அவ்வாறு செய்ய முயற்சிக்கக் கூடாது என்றும் மிஸ்ராவுக்கு நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டாா்.

அமலாக்கத் துறையின் விசாரணையின் போது, தான் கைது செய்யப்படாததால், விசாரணை முடிந்து மத்திய புலனாய்வு அமைப்பால் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தன்னை சிறைக்கு அனுப்புவதால் எந்தப் பயனும் ஏற்படாது என்று சா்வேஷ் மிஸ்ரா தனது ஜாமீன் மனுவில் கூறியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.