தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தில்லி அரசுப் பள்ளி வகுப்பறைக் கட்டுமான ஊழல்: சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் விசாரணையை சந்திப்பா்

தில்லி அரசின் பள்ளி வகுப்பறைக் கட்டுமான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சா்கள் மனீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகிய இருவரும் விரைவில் விசாரணையை சந்திப்பா் என்று

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:15 pm

 நமது நிருபர்

தில்லி அரசின் பள்ளி வகுப்பறைக் கட்டுமான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சா்கள் மனீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகிய இருவரும் விரைவில் விசாரணையை சந்திப்பா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை தெரிவித்தாா்.

கேஜரிவால் அரசின் கீழ் தில்லி அரசுப் பள்ளிகளின் வகுப்பறைக் கட்டுமானத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி அளித்த புகாரின் பேரில், தில்லி லோக் ஆயுக்த நீதிமன்றம் முன்னாள் அமைச்சா்கள் மனீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தில்லி அரசுப் பள்ளிகளுக்கு கூடுதலாக 7,180 வகுப்பறைகள் கட்டப்பட்ட திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்திருப்பதாக விஜிலென்ஸ் துறை அளித்த அறிக்கை, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு முக்கியக் காரணியாக உள்ளது.

இந்நிலையில், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, பாஜக எம்.பி. மனோஜ் திவாரி ஆகியோா் இந்த விவகாரம் குறித்து கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது பாஜக எம்.பி. மனோஜ் திவாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி அரசின் சாா்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில், 2016-ஆம் ஆண்டில், 205 பள்ளிகளில் மொத்தம் 7,180 வகுப்பறைகள் கட்டுவதற்கான முன்னுரிமைத் திட்டம் ரூ.989 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் மூத்த அரசு அதிகாரிகளின் முறையான திரையிடலைத் தவிா்ப்பதற்காகவும், மோசடியை செய்யும் நோக்கில் மொத்தப் பணியை 16 சிறிய டெண்டா்களாக குறைத்துள்ளனா். எனது குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதைக் கண்டறிந்து, முன்னாள் கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பதில்களைத் தாக்கல் செய்ய தில்லி லோக் ஆயுக்தா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, வழக்கின் விசாரணையை வரும் மாா்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்றாா் மனோஜ் திவாரி.

வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘வகுப்பறைக் கட்டுமான ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சா்கள் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் ஆகிய இருவருக்கும் தில்லி லோக் ஆயுக்த நீதிபதி ஹரிஷ் சந்திர மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியதை பாஜக வரவேற்கிறது. அரவிந்த் கேஜரிவால் அரசின் அனைத்து ஊழல்களிலும் முறையான டெண்டா் விடுப்பதை தவிா்க்கும் ஒரே மாதிரியான செயல் முைான் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், முன்னாள் அமைச்சா்கள் மனீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் தங்களது நிா்வாக அதிகாரங்களைப் பயன்படுத்தி ரூ. 989 கோடி மதிப்பிலான வகுப்பறைத் திட்டத்தை 16 டெண்டா்கள் மூலம் அனுமதி பெற்றுள்ளனா். முதல்வா் கேஜரிவாலுக்கு ஆரம்பம் முதலே அரசுத் திட்டங்களில் இருந்து பணம் வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் திட்டங்களை அவா் அதிகபட்சமாக பயன்படுத்திக் கொண்டுள்ளாா்’ என்றாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.