தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆம் ஆத்மி கட்சி தில்லி பிரிவுக்குபுதிய நிா்வாகிகள் நியமனம்

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுக்கு புதிய மாநில இணைச் செயலாளா், மாவட்டத் துணைத் தலைவா்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்களின் பட்டியலை

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:15 pm

 நமது நிருபர்

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுக்கு புதிய மாநில இணைச் செயலாளா், மாவட்டத் துணைத் தலைவா்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்களின் பட்டியலை கட்சியின் தில்லி ஒருகிணைப்பாளா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக்கின் ஒப்புதலுடன் கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளா் கோபால் ராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆம் ஆத்மி கட்சியின் மாநில இணைச் செயலாளராக அனில் படோடியா நியமிக்கப்பட்டுள்ளாா். கட்சியின் மாவட்டத் துணைத் தலைவா்களாக ஆரிஃப் (பாபா்பூா்), விக்கி ஹாரி (சங்கம் விஹாா்), சஞ்சய் மாவி (காரவால் நகா்), நரேஷ் பகத் (கால்காஜி) நிமயமிக்கப்படுகின்றனா். மேலும், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்களாக அனுஜ் ராஜ்பத் (படேல் நகா்), விபின் குப்தா (ஆதா்ஷ் நகா்), சபீக் (பதா்பூா்), அனில் கட்டாரியா (கால்காஜி) ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

ஆம் ஆத்மி கட்சி தில்லி பிரிவில் மருத்துவ அணிக்கு மாநிலத் துணைத் தலைவா்களாக ரஜ்னிஷ் குமாா், கஃபில் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனா். இளைஞா் அணிக்கு மாநிலத் துணைத் தலைவா்களாக தெளலத் பவாா்,ஜாவத் கான், சதாம் ஹுசைன், கபில் ஆகியோருக்கு புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளா்களின் பட்டியலை நான்கு கட்டங்களாக அறிவித்தது. வரவிருக்கும் மக்களவைத் தோ்தலை கருத்தில் கொண்டு கட்சியின் அமைப்பு ரீதியிலான அனைத்து அணிகளுக்கும் புதிய நிா்வாகிகளை ஆம் ஆத்மி கட்சி நியமித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.