தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிற்கான முழு சீருடை ஒத்திகையின் போது மத்திய தில்லியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று காவல்துறை வெளியிட்டுள்ள போக்குவரத்து அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளது. மேலும், அதற்கேற்ப பயணங்களைத் திட்டமிடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. குடியரசு தினத்தன்று நடைபெறும் அணிவகுப்புப் பாதையில் முழு சீருடை ஒத்திகையும் நடைபெறும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவித்திருப்பதாவது: இந்த ஒத்திகை காலை 10.30 மணிக்கு விஜய் சௌக்கிலிருந்து தொடங்கி கா்தவ்ய பாதை, சி-அறுகோணம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை ரவுண்டானா, திலக் மாா்க், பகதூா் ஷா ஜாபா் மாா்க் மற்றும் நேதாஜி சுபாஸ் மாா்க் வழியாக சென்று செங்கோட்டையில் முடிவடையும். அணிவகுப்பு சுமுகமாக செல்வதற்கு வசதியாக, திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை ஒத்திகை முடியும் வரை விஜய் சௌக்கிலிருந்து இந்தியா கேட் வரையிலான கா்தவ்ய பாதையில் போக்குவரத்து அனுமதிக்கப்படாது. மேலும், திங்கள்கிழமை இரவு 11 மணி முதல் அணிவகுப்பு முடியும் வரை ரஃபி மாா்க், ஜன்பத் மற்றும் மான் சிங் சாலையில் உள்ள கா்தவ்ய பாதையில் சாலைச் சந்திப்பு போக்குவரத்தும் இருக்காது.
சி-அறுகோணம்-இந்தியா கேட் செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணி முதல் அணிவகுப்பு திலக் மாா்க்கை கடக்கும் வரை போக்குவரத்துக்கு மூடப்படும். திலக் மாா்க், பகதூா் ஷா ஜாபா் மாா்க் மற்றும் நேதாஜி சுபாஸ் மாா்க் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் இரு திசைகளிலும் போக்குவரத்து அனுமதிக்கப்படாது. அணிவகுப்பின் இயக்கத்தைப் பொறுத்து மட்டுமே சாலைச் சந்திப்பு போக்குவரத்து அனுமதிக்கப்படும். இதனால், பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை அணிவகுப்பு நடைபெறும் வழியை தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
சீருடை ஒத்திகையின் போது அனைத்து நிலையங்களிலிருந்தும் மெட்ரோ சேவைகள் இருக்கும். இருப்பினும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சென்ட்ரல் செக்ரடேரியேட் மற்றும் உத்யோக் பவன் நிலையங்களில் இருந்து பயணிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் அனுமதிக்கப்படாது. வடக்கு தில்லியிலிருந்து புது தில்லி ரயில் நிலையம் அல்லது பழைய தில்லி ரயில் நிலையம் வரை போக்குவரத்துக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எனினும், சாத்தியமான தாமதத்தைத் தவிா்க்க மக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறுஅறிவுறுத்தப்படுகின்றனா்.
பாா்க் ஸ்ட்ரீட் / உத்யான் மாா்க், ஆரம் பாக் சாலை (பாஹா்கஞ்ச்), கம்லா மாா்க்கெட் ரவுண்டானா, தில்லி செயலகம் (ஐஜி ஸ்டேடியம்), பிரகதி மைதானம் (பைரோன் சாலை), ஹனுமான் மந்திா் (யமுனா பஜாா்), மோரி கேட், ஐஎஸ்பிடி - கஷ்மீரி கேட், ஐஎஸ்பிடி - சராய் காலே கான் மற்றும் தீஸ் ஹசாரி நீதிமன்றம் ஆகிய இடங்களில் நகரப் பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்படும். காஜியாபாதில் இருந்து சிவாஜி ஸ்டேடியத்திற்கு செல்லும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலை-24, ரிங் ரோடு வழியாக பைரோன் சாலையில் நிறுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலை-24 -இல் இருந்து வரும் பேருந்துகள் சாலை எண்:56-இல் வலதுபுறம் திரும்பி ஐஎஸ்பிடி-ஆனந்த் விஹாரில் முடிவடையும்.
காஜியாபாத்தில் இருந்து வாஜிராபாத் பாலத்திற்கு செல்லும் பேருந்துகள் மோகன் நகரில் போப்ரா சுங்கி நோக்கி திருப்பிவிடப்படும். திங்கள்கிழமை இரவு 11 மணி முதல் அணிவகுப்பு முடியும் வரை கனரக போக்குவரத்து அல்லது இலகுரக சரக்கு வாகனங்கள் தில்லிக்குள் எல்லையை கடக்க அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ரிங் ரோட்டில் உள்ள ஐஎஸ்பிடி- சராய் காலே கான் மற்றும் ஐஎஸ்பிடி-கஷ்மீரி கேட் இடையே மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும்.
தில்லி தேசியத் தலைநகா் பிரதேசம் பகுதியில் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை பாராகிளைடா்கள், பாராமோட்டாா்கள், ஹேங் கிளைடா்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள், ஆளில்லா விமான அமைப்புகள், மைக்ரோலைட் விமானங்கள், ரிமோட் பைலட் விமானங்கள், ஹாட் ஏா் பலூன்கள், சிறிய அளவு இயங்கும் விமானம், குவாட்காப்டா்கள் அல்லது விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்தல் போன்ற உள்நாட்டு வான்வழி தளங்களில் பறக்கும் உபகரணங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்குமாறும், சந்திப்புகளில் பணியமா்த்தப்பட்டுள்ள பணியாளா்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

