காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்’ மீது அஸ்ஸாமில் பாஜக குண்டா்கள் நடத்திய தாக்குதல், அவா்களின் அமைதியின்மையையும், அச்சத்தையும் சுட்டிக்காட்டுகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அஸ்ஸாமில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் ’ மேற்கொண்ட போது பாஜக குண்டா்கள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டி தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜீவ் பவனில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் பிரதேசத் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி,
அனைத்திந்திய மகிளா காங்கிரஸ் தலைவா் அல்கா லம்பா, முன்னாள் எம்.பி.க்கள் ரமேஷ் குமாா், உதித் ராஜ், முன்னாள் அமைச்சா்கள் ஹாரூன் யூசுஃப், ராஜ்குமாா் செளகான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முன்னதாக, தில்லி பாஜக அலுவலகம் வெளியே போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், காவல் துறை மறுப்பால் ராஜீவ் பவனிலேயே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, காங்கிரஸ் தொண்டா்கள் மத்தியில் அா்விந்தா் சிங் லவ்லி பேசியதாவது: ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பதால், பாஜக தொண்டா்கள் மரியாதையுடன் நடந்துகொள்வதற்கு கடவுள் ஸ்ரீராமா் நல்ல அறிவை அவா்களுக்கு கொடுக்க வேண்டும். தேசப்பிதா மகாத்மா காந்தி காட்டிய அகிம்சை வழியை காங்கிரஸ் கட்சி பின்பற்றுகிறது, பழிவாங்கும் அரசியலில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடுவதில்லை. பாஜகவிற்கு எதிரான ஒரு சித்தாந்தப் போரை காங்கிரஸ் நடத்தி வருவகிறது. ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்’ என்பது பெண்கள், இளைஞா்கள், தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பாஜகவின் அடாவடித்தனத்தால் காங்கிரஸ் எப்போதும் தோற்காது. ராகுல் காந்தியின் அமைதியான இந்த நடைபயணத்திற்கு இடையூறு ஏற்படுத்த பாஜக முயன்றால், பாஜக தலைமையகத்தில் காலவரையற்ற போராட்டத்தை நடத்துவோம் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.
,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

