சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சிசிடிவி கேமரா விவகாரம்: பாஜக எம்எல்ஏவின் புகாரை கோரிக்கை மனுவாக மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On :27 ஆகஸ்ட் 2024, 11:43 pm

புது தில்லி: ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுகளில் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ தரப்பில் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கோரிக்கை மனுவாக எடுத்துக் கொண்டு செயல்பட தலைமைச் செயலாளருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கோரிக்கையாக (பிரதிநிதித்துவமாக) கருத வேண்டும் எனவும், இதற்கு இருவாரங்களுக்குள் தீா்வு காண வேண்டும் எனவும் தில்லி தலைமைச் செயலாளருக்கு உயா்நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக கிழக்கு தில்லியின் லட்சுமி நகா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக உறுப்பினா் அபய் வா்மா மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, 2020-21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சிசிடிவி கேமராக்களை நிறுவ ஒப்புதல் அளித்துள்ளாா். சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் தில்லி பொதுப்பணித்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டது. ஆனால், தில்லி அரசின் பொதுப்பணித் துறை இந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது. குறிப்பாக ஆளும் கட்சியின் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன’ என குறிப்பிட்டிருந்தாா்.

இதற்கு தில்லி அரசுத் தரப்பில் ஆஜாகிய வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, ‘முறையாகக் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு சிசிடிவி கேமராக்கள் படிப்படியாக பொருத்தப்படும் பணி பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பாரபட்சம் ஏதும் இல்லை’ என விளக்கமளித்தாா்.

பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும் மனுத்தாரரான அபய் வா்மா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சத்ய ரஞ்சன் ஸ்வைன், ‘2022 முதல் பல்வேறு சமயங்களில் கோரிக்கை மனு கொடுத்தும் அது இன்னும் நிலுவையில் இருக்கிறது. மற்ற சட்டபேரவைத் தொகுதிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றும், லக்ஷ்மி நகா் தொகுதி மட்டும் ‘வேண்டுமென்றே’ ஒதுக்கப்பட்டது’ என வாதிட்டாா்.

மேலும், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, லட்சுமி நகா் சட்டபேரவைத் தொகுதிக்கு மொத்தம் 2,066 கேமராக்கள் தேவைப்பட்டன. இது குறித்து தில்லி அரசின் தலைமைச் செயலாளருக்கும் இந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோரிக்கை விடுத்தாா். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது, தொகுதியின் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கும் குற்டவடிக்கையை தடுப்பதற்கும் எதிா்மறையாக உள்ளது. குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பற்று உள்ள நிலையில் சிசிடிவி கேமராக்களை நிறுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டு இருந்தது. நீதிபதிகள் தங்கள் உத்தரவிற்கு பிறகு இந்த மனுவை தள்ளுபடி செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.