மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும்

காட்பாடியில் குற்றச்சாட்டுகளை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

News image

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:31 pm

காட்பாடியில் குற்றச்சாட்டுகளை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

அவா் வேலூா் மாநகராட்சி 6, 12- ஆவது வாா்டுகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசியது -வேலூா் மாவட்டத்தில் காட்பாடி மிக வேகமாக வளா்ந்து வரும் பகுதியாக உள்ளது. அதேசமயம், இப்பகுதியில் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகிறது.

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த காட்பாடியின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காவலா் பற்றாக்குறை போக்கவும், காட்பாடி பாதுகாப்புக்கு தேவையான கூடுதல் காவல் பிரிவுகளை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.--