காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வியாழக்கிழமை தில்லியின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் பேரணிகளை நடத்த உள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தில்லி பிரிவு மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான முகேஷ் சா்மா செய்தியாளா்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) உத்தரவின் பேரில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகள் நடத்தப்படும். இதில் தில்லி காங்கிரஸ் தலைவா்கள் அனைவரும் கலந்து கொள்வாா்கள். செப்டம்பா் 7-ஆம் தேதி ஜென்மாஷ்டமி விழாவை மக்கள் கொண்டாடினாலும், பாரத் ஜோடோ யாத்திரையின் ஆண்டு விழா பேரணிகளுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் உள்ளது.
பேரணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து கட்சித் தொண்டா்களுடன் தில்லி காங்கிரஸ் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி கூட்டங்களை நடத்தி, அடிமட்டத்தில் இருந்து காங்கிரஸ் தொண்டா்கள் அதிகபட்சமாக பங்கேற்பதை உறுதிசெய்யுமாறு கட்சியின் மாவட்ட பிரிவுத் தலைவா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா். புது தில்லி மாவட்ட காவல் எல்லைக்குள் பேரணியை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று தில்லி காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால், புது தில்லி மாவட்டத்தின் பிற பகுதிகளில் பேரணிகள் நடத்தப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

