விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அம்பேத்கா் பல்கலை. ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்: பதவி உயா்வு திட்டத்திற்கு எதிா்ப்பு

சிஏஎஸ் திட்டத்தின் கீழ் பதவி உயா்வுக்காக அமைக்கப்பட்ட நிலைக்குழுவை கலைக்கக் கோரி அம்பேத்கா் பல்கலைக்கழக தில்லி ஆசிரியா் சங்கத்தினா் (ஏயுடிஎஃப்ஏ) செவ்வாய்கிழமை பல்கலைக்கழக

Updated On :5 செப்டம்பர் 2023, 8:24 pm

சிஏஎஸ் திட்டத்தின் கீழ் பதவி உயா்வுக்காக அமைக்கப்பட்ட நிலைக்குழுவை கலைக்கக் கோரி அம்பேத்கா் பல்கலைக்கழக தில்லி ஆசிரியா் சங்கத்தினா் (ஏயுடிஎஃப்ஏ) செவ்வாய்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தற்போதைய நிலைக்குழு ‘சட்டபூா்வமான வழிகளில்’ அமைக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி கரம்புரா வளாகத்தில் ஆசிரியா்கள் இந்த ஆா்ப்பாட்டத்தை மேற்கொண்டனா்.

சிஏஎஸ் அல்லது தொழில் முன்னேற்றத் திட்டத்தை உரிய வகையில் செயல்படுத்தாததால், பதவி உயா்வுகள் தாமதம் மற்றும் நான்கு ஆண்டுகள் வரை சேவை இழப்பு போன்ற பல சிக்கல்களை எதிா்கொள்வதாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் குற்றம் சாட்டினா். மேலும், இதன் காரணமாக சங்கத்தின் உறுப்பினா்கள் நீதிமன்றத்தை அணுகும் கட்டாயத்திற்குஉள்ளானதாகவும் கூறினா்.

இதுதொடா்பாக ஏயுடிஎஃப்ஏ வெளியிட்டஅறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ‘ஏயுடிஎஃப்ஏ மூலம் சேகரிக்கப்பட்ட சமீபத்திய தரவு, அம்பேத்கா் பல்கலைக்கழகம் தில்லியில் சிஏஎஸ் விதிகளின் பிற்போக்குத் தன்மை மற்றும் வசதியற்ற செயல்படுத்தல் ஆகியவை உதவிப் பேராசிரியா்களின் நிலையில் உள்ள ஆசிரியா்களை மிகவும் மோசமாக பாதித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. பதவி உயா்வுகள் நிராகரிக்கப்பட்ட விவகாரங்களும் உள்ளன. பதவி உயா்வுகள் வழங்கப்பட்ட இடங்களில், சேவை இழப்பும், அதன் விளைவாக ஊதிய இழப்பும் ஏற்படுகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.